Logo
Traditional Medicine With Modern Techniques!

Request A Quote

Get In Touch

Please fill out the form below if you have a plan or project in mind that you'd like to share with us.

Follow Us On:

We Are Happy To Recover You from the continuous medicine

Why Choose Pothigai Health Care

நமது 'பொதிகை சித்த மருத்துவ மையம்' நோயாளிகளின் உடல் நலத்தை சித்த மருத்துவம் மூலம் மேம்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. எங்களை நாடி வரும் அன்பர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்வதோடு சிறப்பான செயல்பாடுகள் மூலம் 'பொதிகை சித்த மருத்துவ மையம்' பிறவற்றிலிருந்து தனித்து செயல்படுகிறது.

நோயினால் துன்பப்படுபவர்கள் தங்களது உடல் நலனை மேம்படுத்த பொதிகை சித்த மருத்துவ மையத்தை நம்பி அணுகிட காரணங்கள் இவைகள் என தொகுத்துள்ளோம். அவைகள்,

  • சித்த மருத்துவராக இருந்து மக்களுக்கு சேவை செய்வதை உன்னதமான பணியாக கருதுகின்றோம்,
  • திருவள்ளுவர் இன்னா செய்யாமை எனும் அதிகாரத்தில்,

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போல் போற்றாக் கடை (குறள்-315)

    பொருள்: மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ என்கிறார்,
    இதைஉணர்ந்து நோயாளிகளின் துன்பத்தை தனது துன்பமாக கருதி 'பொதிகை சித்த மருத்துவ மையம்' செயல்பட்டு வருகிறது.
  • 'வரும்முன் காப்பாதே சிறந்தது' அப்படி வந்த நோய்களை மட்டும் குணப்படுத்தாமல், நோய்கள் வராதிருக்கவும் மருந்துகளை வழங்கியும், ஆலோசனை வழங்கியும் வருகிறது நமது 'பொதிகை சித்த மருத்துவ மையம்'
  • சித்த மருத்துவ நோய் கண்டறியும் வழிகளான நாடி, எண்வகை தேர்வு, உயிர் மற்றும் உடல் தாதுக்கள் ஆய்வு, மணிக்கடை நூல், போன்றவற்றுடன் தேவையிருப்பின் இரத்த பரிசோதனை, சளி மாதிரி ஆய்வு, ஹார்மோன்கள் பரிசோதனை, என்சைம்கள் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, விந்து பரிசோதனை, x-கதிர் ஆய்வு, ஸ்கேன் போன்றவைகளையும் மேற்கொண்டு நோய்களை கண்டறிகிறது நமது 'பொதிகை சித்த மருத்துவ மையம்'
  • நமது பொதிகையில் நோய்களை கண்டறிந்து அதனை சித்தர்களின் வாத, பித்த, கப அடிப்படையில் பிரித்து சிகிச்சை அளிக்கபடுகிறது.
  • பொதிகை சித்த மருத்துவ மையத்தில் மருந்துகள் முறைப்படி தயாரித்து வழங்கப்படுகிறது.
  • நிரந்தர தீர்வையே இலக்காக கொண்டு 'பொதிகை சித்த மருத்துவ மையம்' செயல்படுகிறது, குணமடைந்த நோயாளிகளுக்கு மீண்டும் நோய் வராதிருக்க தக்க மருத்துவ ஆலோசனை, உண்ண வேண்டிய மற்றும் உண்ண கூடாத உணவுகள் பட்டியல் போன்றவற்றை வழங்கி வருகிறது.
  • பொதிகையை அணுகிய நோயாளிகளுக்கு மருந்து உண்பதிலோ, உணவு கட்டுப்பாடுகள் குறித்தோ எந்த சந்தேகம் இருப்பினும் எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். மேலும் குறிப்பிட்ட இடைவெளியில் எங்கள் அலுவலக மேலாளர் நோயாளிகளை தொடர்புகொண்டு உடல் முன்னேற்றம் குறித்து கேட்டறிவார்.
  • பொதிகை சித்த மருத்துவ மையத்திற்கு வரும் நோயாளிகளுக்கு அவர்கள் தொடர்புடைய நோய் மட்டுமின்றி முக்கிய உடல் உறுப்புகளின் ஆரோக்கியங்களும் கவனத்தில் கொள்ளப்படும்.
  • பொதிகை சித்த மருத்துவ மையத்தில் வழங்கும் மருந்துகள் அனைத்தும் அனுபவமிக்க மருந்து தயாரிப்பாளர்கள் கொண்டு தயாரிக்கபடுவதால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படுத்தாதவை, எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நம்பிக்கையாக வழங்கலாம்.
  • பொதிகை சித்த மருத்துவ மையம் தனது மருத்துவ சேவையை தமிழகம் முழுவதும் வழங்குவதை நோக்கமாக கொண்டு தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் மருத்துவ முகாமிட்டு வருகிறது.
  • வயதானவர்கள், போக்குவரத்து மேற்கொள்ள இயலாத நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இல்லம் தேடி அவர்களை பரிசோதித்து மருத்துவ சேவை செய்கிறோம்.
  • சித்த மருத்துவ மருந்துகளை அதன் குணம், வீரியம் மாறாமல் நோயாளிகள் வசதியாக எடுத்துகொள்ளுவதற்க்கு ஏற்ப நவீன முறையில் [உதாரணம்:பொட்டலங்கள் (sachets), சிரப் (syrup), தைல உருட்டிகள் (roll on), நுகரும் மருந்துகள் (inhaler).., போன்றவை] வழங்கி வருகிறோம்.
icon

Our Vision

  • ' நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் ' என்பர் முன்னோர், அப்படிப்பட்ட குறைவற்ற செல்வத்தை வழங்குதலே பொதிகை சித்த மருத்துவ மையத்தின் (Pothigai Health Care) நோக்கம்
  • இயற்கையான முறையில் நோயிலிருந்து மீட்டு உடல், மன மற்றும் சுற்றுப்புற ஆரோக்கியதுடன் மகிழ்ச்சியாக வாழ துணைபுரிதலே பொதிகை சித்த மருத்துவ மையத்தின் (Pothigai Health Care) முதன்மையான நோக்கம்.
  • நோய்க்காக எடுக்கும் மருந்தினால் நோயுண்டாகாமல் அதாவது பக்க விளைவுகள் எதுவும் இல்லாத தரமான மருந்தினை முறைப்படி தயார் செய்து நோய்க்கு வழங்குவதே பொதிகை சித்த மருத்துவ மையத்தின் (Pothigai Health Care) குறிக்கோள்.
  • குணமடைந்த பின் மீண்டும் நோயினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் துன்புறாமல் இருக்க தேவையான வாழ்வியல் நெறிகளை கொடுத்தல்.
  • உடலின் அடிப்படை தத்துவத்தையும், செயல்பாட்டையும் உணர்த்தல்.
  • சித்த மருத்துவ மருந்துகளின் பழமையும், வீரியமும் மாறாமல் நவீன முறையில் வழங்குதல்.
icon

Our Mission

  • தமிழர் மருத்துவமாகிய சித்த மருத்துவத்தை ஒரு ஊடகமாக கொண்டு தமிழின் சிறப்பையும், தமிழரின் பெருமையையும், இந்திய நாட்டின் பாரம்பரியத்தையும் உலகம் முழுவதும் அறிய செய்தல்.
  • சித்த மருத்துவம் உலகின் தலை சிறந்த, ஈடு இணையற்ற மருத்துவம் என்பதை உணர்த்தல்.
  • மேலும் சித்த மருத்துவம் என்பது மருத்துவ முறை மட்டுமன்றி நெறிபடுத்தப்பட்ட வாழ்வியல் முறை என்பதை உணர்த்தல்.