
Please fill out the form below if you have a plan or project in mind that you'd like to share with us.
பெருமைக்குரிய இந்திய நாட்டிற்கு , இயற்கை எழில் சூழ, எல்லா வளமும் நிறைந்து மருத்துவத்திற்கென தனி வரலாறு கொண்ட உலகின் மூத்த குடியான 'தமிழர்கள்' வாழும் 'தமிழ்நாட்டிற்கும்’ , உலகிலுள்ள எல்லா மொழிக்கும் தாய்மொழியான 'தமிழ் மொழிக்கும்’, என் மேலான வணக்கம் !
சித்த மருத்துவம் எனும் மானிட பெருங்கொடையை கற்றுக்கொண்டு மனிதனை பற்றியும், வாழ்வை பற்றியும், மருத்துவம் பற்றியும் அறிந்துகொள்ள எனக்கு அருளிய இறைவனுக்கும், சித்தர்களுக்கும், என் பாத வணக்கம் !
சித்த மருத்துவத்தின் தனிச்சிறப்பு அதன் பக்கவிளைவுகளற்ற மருந்துதான், அம்மருந்தை உற்பத்தி செய்ய தேவையான மூலிகைகளை வழங்கும் இயற்கைக்கு என் பணிவான வணக்கம் !
சித்தமருத்துவம் படிப்பதற்கு முன்பே தங்களை சித்தமருத்துவத்தில் ஈடுபடுத்தி கொண்டு, எனக்கும் இம்மருத்துவத்தின் மீது ஈர்ப்பு உண்டாக காரணமான என் தாய், தந்தையருக்கு என் அன்பான வணக்கம் !
தங்கள் உடல் நலனை மேம்படுத்த பொதிகை சித்தமருத்துவ மையம் மீது நம்பிக்கையுடன் வரும் எனது உறவுகளுக்கு நன்றி கலந்த வணக்கம் !
நான் உங்கள் சித்தமருத்துவர் V.சிவஞானம், பள்ளி பருவத்திலிருந்தே தமிழ் மீது கொண்ட காதலும், இயற்கையின் தேர்வும் என்னை சித்தமருத்துவ படிப்பினை நோக்கி அழைத்துச்சென்றது. சித்தமருத்துவம் மீதான எனது ஆர்வம் மனிதன் மீது, நோய்களின் மீது, மருந்தின் மீதும் என தேடலாக தொடர பல தத்துவத்தையும், உண்மைகளையும் இயற்கை விடையாக உணர்த்தியது. அதோடு மட்டுமல்ல தேடலின் பயனாய் 5 1/2 வருட சித்தமருத்துவ படிப்பின் முதலாம் ஆண்டிலிருந்தே நண்பர்கள், வாடகை வீட்டு வட்டாரம், பயணங்களில் பழகிய நபர்கள், என பலரது நோய்களை குணப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.
ஒவ்வொரு நபரிடமும் நாடி பார்த்து குறிகுணங்களை கேட்கையில் 'எப்படி இவன் நமது உடலில் உள்ளவற்றை நாம் கூறாமல் கண்டறிகிறான் !' என அதிசயித்தனர், ஒரு சிலர் வெளிப்படயாக கேட்டனர். அவர்களிடம் இது சித்த மருத்துவதின் ஒரு துளியே, இன்னும் மணிக்கடை நூல், உயிர்தாதுக்கள், உடல்தாதுக்கள், எண்வகைதேர்வு, நீர்க்குறி, நெய்க்குறி, தூதுவன் இலக்கணம், நால்ஒழுக்கம், காலஒழுக்கம், வாழ்வியல் நெறிகள், வர்மம்...., என சித்தமருத்துவம் மிகப்பெரிய கடல், என்பதை உணர்த்தி பெருமைபட்டு கொண்டேன்.
நாடியில் தொடங்கி நோய்களை முக்குற்ற அடிப்படையில் பிரித்து தக்க மருந்துகளை நானே செய்து வழங்கி, அதற்கேற்ற தொக்ணம்(Massage), வர்மம் செய்து குணப்படுதுகையில் உண்மையான மகிழ்ச்சி கிடைத்தது. ஒவ்வொருவரும் நோயிலிருந்து மீண்டு இயல்பாக இருப்பதை காணும்போது கிடைத்த மகிழ்ச்சியுடன் அவர்களின் ஆத்மாத்தமான அன்பும் மிகவும் பிடித்தது. இப்படிப்பட்ட உண்மையான அன்பை தேடி தொடங்கிய பயணத்தின் வெளிப்பாடே இந்த 'பொதிகை சித்த மருத்துவ மையம்'
" We Treat Lots Of Diseases, Even Which Are Left Untreated In Other System Of Medicines "